கின்னஸ் உலக சாதனை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வோராண்டும் கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் வெளியிடப்படுகிறது. 2013 ஆம் ஆண்டுக்கான கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக... அந்த நிறுவனம் ஒரு "கின்னஸ்' சாதனையைச் செய்திருக்கிறது!
ஆம்!
உலகிலேயே மிக மிகக் குள்ளமான இருவரைச் சந்திக்க வைத்து அதைப் படமெடுத்து, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த குள்ளமான மனிதர்களில் ஒருவர் 18 வயதேயான இளம்பெண் ஜோதி ஆம்கே. ஜோதி நாக்பூரைச் சேர்ந்தவர். இவருடைய உயரம் 62.8 செ.மீ. எல்லாப் பெண்களையும் போல விதவிதமான ஆடைகள் அணிவதில், ஆபரணங்களை அணிவதில் அடங்காத ஆர்வம். இவருடைய உயரத்துக்குப் பொருத்தமாக இவை எல்லாம் ஸ்பெஷலாகச் செய்யப்படுகின்றனவாம். குட்டியூண்டு பெட், குட்டியூண்டு தட்டு, குட்டியூண்டு சேலை... என்று எல்லாம் சின்னச் சின்னதாக.
ஜோதி ஆம்கேவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை. "பிக் பாஸ்' போன்ற சில பாலிவுட் படங்களில் நடித்துமிருக்கிறார். உலகிலேயே குள்ளமான பெண் என்ற கின்னஸ் ரிக்கார்டின் அங்கீகாரத்துக்குப் பிறகு, "உலகம் சுற்றும் வாலிபி'யாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து என்று ஜோதியின் சிறிய பாதங்கள் பதிந்து கொண்டு இருக்கின்றன.
ஜோதியை விடக் குள்ளமானவர் நேபாளத்தைச் சேர்ந்த சந்திர பகதூர். உலகின் மிகக் குள்ளமான மனிதர் இவர்தான். உயரம் 54.6 செ.மீ.
இதற்கு முன்னால் உலகிலேயே குள்ளமான மனிதராக இருந்த இந்தியாவைச் சேர்ந்த குல் முகம்மதுவின் உயரத்தைவிடவும் (57 செ.மீ.) இவர் உயரம் குறைந்தவர்.
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டிலிருந்து மேற்கே 250 மைல்களுக்கு அப்பால் உள்ள மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பகதூர்.
""கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் என் பெயர் இடம் பெற்றிருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இது எனக்கு மட்டும் பெரிய விஷயமல்ல... என் குடும்பத்துக்கு, என் ஊருக்கு, என் நாட்டுக்கு... இது ரொம்ப ரொம்ப பெரிய விஷயம். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது'' என்கிறார் 72 வயதான சந்திர பகதூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


